தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாது! பாஸ் கட்சி பிடிவாதம்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 6,

பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் மற்ற கட்சிகளுக்குத் தொகுதிகளைப் பகிர்ந்துக் கொள்வதில் பாஸ் கட்சி பிடிவாதமாக இருக்கும் என பாஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவர் Datuk Seri Sanusi Md Nor தெரிவித்தார். பாஸ் கட்சியின் வசம் இருக்கும் சட்டமன்றங்களையும் நாடாளுமன்றங்களையும் மற்ற கட்சிகளுக்குத் தாரை வார்க்க முடியாது. பாஸ் கட்சி பல ஆண்டுகளாக அந்த தொகுதிகளில் உழைத்திருக்கிறது. அதனைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்கும் எண்ணம் பாஸ் கட்சிக்கு இல்லை என்பதை மற்ற அரசியல் கட்சிகளும் உணர வேண்டும் என Datuk Seri Sanusi Md Nor தெரிவித்தார். 

கெடாவில் பாஸ் கட்சி தனித்து போட்டியிடவே விரும்புகிறது. கெடாவில் பாஸ் கட்சி எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என கெடா மாநில மெந்திரி பெசாருமான Datuk Seri Sanusi Md Nor தெரிவித்தார். தேர்தலின் போது பாஸ் கட்சி எந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதைப் பாஸ் கட்சி முன்கூட்டியே அறிவிக்கும். அந்த அறிவிப்புகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகள் மட்டும் எங்களுடன் கூட்டணி அமைக்கட்டும் என்றும் தேர்தல் தொகுதிப் பங்கீட்டைப் பாஸ் கட்சியே தீர்மானிக்கும் என Datuk Seri Muhammad Sanusi Md Nor திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *