எப்ஸ்டின் பைல்ஸ் விவகாரம் - கைது செய்யப்பட்ட இங்கிலாந்து இளவரசர்!
- Muthu Kumar
- 20 Feb, 2026
அமெரிக்காவில் ஜெப்ரி எப்ஸ்டின் என்பவர் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக எழுந்த புகாரையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரது வீட்டில் இருந்து வீடியோ உள்ளிட்ட ஏரளான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, இந்த ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து அந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட உலக அளவில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இங்கிலாந்து அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ என்பவரின் பெயரும் இதில் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த புகாரையடுத்து இங்கிலாந்து அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் 3 வது மகனான இவர், எப்ஸ்டின் பைல்ஸ் விவகாரத்தில் தனது பெயர் இருப்பதாக வெளிவந்த நிலையில், அவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். மேலும், எப்ஸ்டின் பைல்ஸ் குறித்த புகாருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், தற்போது பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தனது இளவரசர் பட்டத்தையும் அவர் துறந்துள்ளார். இங்கிலாந்தில் முன்னாள் இளவரசர் ஒருவரைக் கைது செய்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இது குறித்து, காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்த்தக தூதராக இருந்த போது ரகசியத் தகவல்களை எப்ஸ்டினுக்கு கசியவிட்டது. எப்ஸ்டினுடன் சேர்ந்து பெண்களைக் கடத்திய விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக வெளியான ஆவணங்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மரியாதை நிமித்தமாக அவரது பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



