ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரிக்கு பயிற்சி செலவை ஏற்கும் மைலோ நிறுவனம்!

top-news

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் (எல்ஏ 2028) ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் நாட்டின் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரிக்கு ஆதரவு வழங்க மைலோ நிறுவனம் முன் வந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்கும் அவருக்கான பயிற்சி மற்றும் கல்விக்கான ஒரு பகுதி செலவை நெஸ்லே (ம) பெர்ஹாட், மைலோ நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என அந்நிறுவனத்தின் விளையாட்டுப் விற்பனைப் பிரிவின் தலைவர் லிம் கெர் வின் தெரிவித்தார்.

இந்த ஆதரவின் மூலமாக அவரின் வெற்றியின் மீது மிகுந்த நம்பிக்கையை கொண்டிருக்கும் வேளையில் தொடர்ந்து அவர் நாட்டில் சிறந்ததொரு தேசிய வீராங்கனையாக திகழ்வார்.மேலும் நாட்டில் உள்ளசிறுவர்களும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்க இதுவொரு தூண்டுகோலாக அமையும் என்றார்.

தற்போது நாட்டின் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் கண்டு வரும் இவரைப் போன்ற நட்சத்திரங்களை ஆதரிப்பதில் பெருமைக் கொள்வதாகவும் கூறிய அவர்,எதிர்காலத்தில் சிறந்த வெற்றியை அவர் குவிக்க வேண்டும் என குறிப்பிட்டார். தற்போது உலகதர வரிசையில் 10வது நிலையில் இருக்கும் எஸ்.சிவசங்கரி, தமக்கு ஆதரவு வழங்கியுள்ள மைலோ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு,இறைவனையும் பிரார்த்தித்துக் கொள்வதாகவும் கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *