உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய மெக்சிகோ; தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

top-news

மெக்சிகோ சிட்டி, ஜூன் 12 –

2026 கால்பந்து உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இணை நடத்துநரான மெக்சிகோ அணி, தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

பிரபலமான அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற ‘குரூப் ஏ’ பிரிவு ஆட்டத்தில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுக்கு மத்தியில் களமிறங்கிய அந்த அணி, பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு எதிரணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது.

மெக்சிகோவின் வெற்றிக்கு ஜூலியன் குவினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமினெஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி தனது முதல் ஆட்டத்திலேயே முழு மூன்று புள்ளிகளையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ஆட்டத்தின் போது ஏற்பட்ட கடுமையான மோதல்கள் காரணமாக மொத்தம் மூன்று வீரர்களுக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் போட்டியின் இறுதிக்கட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *