ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ‘ராக்கா’; ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியானது

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூன் 13 –

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராக்கா’ குறித்த புதிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘புஷ்பா 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது. படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிப்பதுடன், மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் ரூ.800 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும், சிறப்பு தோற்றங்களில் சில முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களும் இடம்பெறலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், ‘ராக்கா’ திரைப்படம் 2027 டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து, அதனைத் தொடர்ந்து சுமார் 10 மாதங்கள் காட்சி அமைப்பு மற்றும் உயர்தர விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *