Condominium கட்டுமானத்தில் விரிசல்! கட்டுமானத்தை நிறுத்த DBKL உத்தரவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 9: தலைநகர், வாங்சா மஜூவில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் J Satine condominium வளாகத்தில் கட்டடக் கோளாறுகள் காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பணிநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான டிபிகேஎல் அந்த இடத்தை ஆய்வு செய்ததாகவும், சி பிளாக்கின் எட்டாவது மாடிக்கு மேலே உள்ள அலகுகளில் சுவர்கள், தூண்கள் மற்றும் தளங்களில் விரிசல் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தளம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக அதைப் பராமரிப்பதற்கு டெவலப்பருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அது கூறியது.

DBKL இன் அனைத்து அறிவுறுத்தல்களுக்கும் டெவெலப்பர் இணங்கும் வரை ஸ்டாப் ஒர்க் ஆர்டர் செயல்படுத்தப்படும்.

வெடிப்புக்கான காரணம் மற்றும் கட்டமைப்பு சிக்கல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *