ஹிட் படத்தின் 2ம் பாகத்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதான்!

top-news
FREE WEBSITE AD

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அசோக் மாரிமுத்துவும், பிரதீப் ரங்கநாதனும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.இருவரும் நண்பர்கள்.அப்படித்தான் இருவரும் இணைந்து டிராகன் படத்தை உருவாக்கினார்கள்.அஸ்வத் இயக்கிய இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த அனுபமா பரமேஸ்வரன், கயாடு ஹோஹர், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 100 கோடி வசூலை தொட்டதாக சொல்லப்பட்டது. இந்த படத்திற்கு பின் கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான Dude திரைப்படமும் அசத்தலான வெற்றியை பெற்றது.. பிரதீப் ரங்கநாதன் அடுத்து ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் என்கிற செய்தி ஏற்கனவே வெளியாகிவிட்டது.

இந்நிலையில்தான் பிரதீப் ரங்கநாதன் ஒரு முக்கிய செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'விரைவில்' என பதிவிட்டு இரண்டு டிராகன் புகைப்படங்களை வைத்திருக்கிறார்.. இதை பார்க்கும் போது பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடிக்கும் படத்திற்கு டிராகன் 2 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *