இந்தியர்களிடம் இவ்வளவு பிரச்சனையா? RAFIZI அதிர்ச்சி!
- THINAGAREN SANGGAREN
- 21 Aug, 2026
ஆகஸ்ட் 21,
மலேசிய இந்தியர்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து 19 இந்திய இயக்கங்களிடம் முன்னாள் பொருளாதார அமைச்சரும்
BERSAMA கட்சியின் தலைவருமான DATUK SERI RAFIZI RAMLI சிறப்புச் சந்திப்பை நடத்தியிருப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் பல்வேறு தரவுகள்
விவாதிக்கப்பட்டதாகவும் டி.ஏ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் CHARLES SANTIAGO தெரிவித்தார். இந்தியர்களைத் தேர்தல் காலத்தில் மட்டும் ஓட்டுக்காகக் கவனிக்கும்
அரசியல்வாதிகளின் சிந்தனை மாற்றப்பட வேண்டும் என CHARLES SANTIAGO வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில்
19 இந்திய இயக்கத்தின் தலைவர்கள் பங்கேற்றதாக CHARLES SANTIAGO தெரிவித்தார்.
இந்திய தொழிலாளர்களில் 50% விழுக்காட்டினர் RM2,600-க்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர் என்றும் பல்வேறு குற்றங்களுக்காக
22% விழுக்காட்டினர் சிறையில் இருப்பதாகவும் 22% விழுக்காட்டினர் மரணத் தண்டனையை எதிர்நோக்குவதாகவும்
அந்த சந்திப்புக் கூட்டத்தில் தரவுகளுடன் விவாதிக்கப்பட்டதாக CHARLES SANTIAGO தெரிவித்தார்.
குறிப்பாக வேலை
வாய்ப்புகளில் 9% விழுக்காட்டு இந்தியர்கள் மட்டுமே தேர்வு பெறுவதாகவும் சீனர்கள்
33% மலாய்க்காரர்கள் அதிகமாகவும் இருப்பதையும் தரவுகள் குறிப்பிடுவதாக CHARLES SANTIAGO தெரிவித்தார். இந்த நிலை நீடித்தால் இந்தியர்களின் எதிர்காலம் பெருமளவில் பாதிப்பை
ஏற்படுத்தும் என CHARLES
SANTIAGO சுட்டிக்காட்டினார். இந்த சிக்கல்களுக்கு அரசாங்கத்தின்
சிறப்பு நிதி ஒதுக்கீடுகளுடன் நீண்டக் கால வளர்ச்சிக்கான திட்டங்கள், அமைச்சரவையில்
இந்தியர் நலப் பிரிவுகள் என்பன உருவாக்கப்பட வேண்டும் என்றும் இச்சந்திப்புக் கூட்டத்தில்
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக CHARLES SANTIAGO தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



