நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா தொடர்ந்து 3 ஆம் இடத்தில்!

top-news

நார்வே செஸ் தொடரின், 7-வது சுற்றில் உலக செஸ் சாம்பியனான டிங் லிரினை தோற்கடித்து அசத்தினார் தமிழக இளம் செஸ் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா.6-வது சுற்றின் முடிவில் அலிரேசா ஃபிரோஸ்ஜாவிடம் தோல்வி கண்டு 3-வது இடத்தில் நீடித்து வந்தார்.

அதன்பின் நார்வே செஸ் தொடரில் நடைபெற்ற 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா, உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரினை முதலில் நடந்த கிளாசிக்கல் சுற்றில் சமன் செய்து, அதன் பிறகு நடந்த சுற்றில் அவரை தோற்கடித்து 3-வது இடத்திற்கு முன்னேறினார். அதனை தொடர்ந்து நடந்த நார்வே செஸ் தொடரின் 8-வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.

முதலில் நடைபெற்ற போட்டியில் இருவரும் சமன் செய்தனர், அதன் பின் நடந்த முடிவு சுற்றில் மேக்னஸ் கார்ல்சன், பிரக்ஞானந்தாவை தோற்கடித்து முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா 3-வது இடத்தில் நீடித்து வருகிறார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *