அமெரிக்காவில் கிராண்ட் செஸ் தொடரின் 2 வது சீசனில் பிரக்ஞானந்தா 7 வது இடம்!

top-news

அமெரிக்காவில் கிராண்ட் செஸ் தொடரின் 2 வது சீசன் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் உட்பட உலகின் 'டாப்-9' வீரருடன், சிறப்பு அனுமதி (வைல்டு கார்டு) பெற்ற உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் பங்கேற்கிறார்.

இதன் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லே விளையாடினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா. போட்டியில் பெரும்பாலான நேரத்தில் ஆதிக்கம் செலுத்தினார். சரியான பினிஷிங் செய்ய முடியாமல் தடுமாற 107 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.

இந்தியாவின் குகேஷ், அஜர்பெய்ஜானின் நாடிர்பெக் மோதிய மற்றொரு போட்டி 46 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஐந்து சுற்று முடிவில் அமெரிக்காவின் பிரான்சின் அலிரேசா, வெஸ்லே முதல் இரு இடத்தில் உள்ளனர். தலா 2.5 புள்ளியுடன் குகேஷ் 4வது, பிரக்ஞானந்தா 7 வது இடத்தில் உள்ளனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *