கூட்டரசு அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்துடாக்டர் மகாதீர் முகமதுவும், தெங்கு ரஸாலி ஹம்சாவும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 28-

கூட்டரசு அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்து மூத்த தலைவர்களான டாக்டர் மகாதீர் முகமதுவும், தெங்கு ரஸாலி ஹம்சாவும் இப்போது வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் இருவரும் அதிகாரத்தில் இருந்தபோது கூட்டரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார சமநிலை சீர்குலைந்தது என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் மகாதீர் பிரதமராக இருந்தபோது கூட்டரசு அரசாங்கத்திடம் அளவுக்கு அதிகமான அதிகாரம் குவிந்து கிடந்தது என்று டாஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வியல் பேராசிரியர் ஜேம்ஸ் சின் தெரிவித்தார்.

தெங்கு ரஸாலியைப் பொறுத்தமட்டில், அவர் நிதியமைச்சராக இருந்த வேளையில்தான்,
1974ஆண்டில் பெட்ரோலியம் மேம்பாட்டுச் சட்டம் வரையப்பட்டது. அதற்கு அவர்தான் பொறுப்பு. இதனால்தான், சபா, சரவாக் பிரதேசங்களில் எண்ணெய் மீதும் வாயு மீதும் இருந்த அம்மாநிலங்களின் உரிமைகளை மலேசியா பறித்துக் கொண்டது என்று அவர் கூறினார்.

உண்மையான கூட்டரசு என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாநில அரசுகள் மிக பலவீனமாக இருப்பதும் மத்திய அரசாங்கம் மிக வலுவுடன் இருப்பதுதான் மலேசியாவின் பிரச்சினையாகும். கூட்டரசின் தற்போதைய நிலை குறித்து பெரும்பாலான கிழக்கு மலேசியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதன் காரணமாகத்தான், கிழக்கு மலேசியாவில் 1963ஆம் ஆண்டு மலேசியா ஒப்பந்தம் பெரிய விஷயமாக உருவெடுத்துள்ளது என்றார் சின்.சபா மற்றும் சரவாக்கிற்கு கூட்டரசு அரசாங்கம்தான் வலுவூட்டுகிறது என்று டாக்டர் மகாதீரும் தனது பிரதேசத்தையும்,வளங்களையும் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பு மலேசியாவுக்கு உள்ளது என்று துங்கு ரஸாலியும் அண்மையில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தனர்.

கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து தங்களுக்கு மிகச் சிறிய உரிமைத் தொகைதான் தங்களுக்கு கிடைத்து வருகிறது என்று அவ்விரு மாநிலங்களும் குறைகூறிவருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *