பிரதமர் மோடியைக் கேலி செய்து பேசிய ராகுல் காந்தி: பாஜக கடும் தாக்கு
- Surendran Sumdraraj
- 14 Aug, 2026
புதுடெல்லி, ஆக. 14 —
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுக் கொள்கையை கேலி செய்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய ராகுல் காந்தி, பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது, பிரதமர் மோடியின் வெளிநாட்டுக் கொள்கை என்பது வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது போல் உள்ளது என அவர் விமர்சித்தார்.
தனது கருத்தை விளக்கும் வகையில், மேடையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தும் ராகுல் காந்தி காட்டினார். மேலும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்தியாவைப் புரிந்துகொள்ளாத “கோமாளிகள்” என்றும் அவர் விமர்சித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



