ஆங்கிலத் திரைப்படத்திற்கு இணையான கல்கி 2898 ஏடி படத்தின் டிரைலர்!

top-news

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் கல்கி 2898ஏடி. 

இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் நாக் அக்ஸின் இயக்கி இருக்கிறார். இவர் தெலுங்கில் நடிகையர் திலகம் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி பிரபலம் அடைந்தார். இத்திரைப்படத்தின் மூலம் அவருக்கு தேசிய அளவில் விருதுகள் கிடைத்தன. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. 

படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு உதவும் நண்பராக புஜ்ஜி என்ற ரோபோ கார் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கல்கி பட டிரைலர் வெளியாகி இருக்கிறது. வரும் ஜூன் 27-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *