தமிழ் - சீன மொழிகளில் அதிகமான ஆசிரியர்களுக்கு பயிற்சி! - பிரதமர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தேசிய மொழியுடன் சேர்த்து சீன மற்றும் தமிழ் மொழிப் பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ் மற்றும் சீன தேசிய வகைப் பள்ளிகளுக்குப் போதிய பணியாளர்களை உறுதி செய்வதற்காக இந்த மொழிகளில் அதிகமான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த முயற்சி கல்வி அமைச்சுக்கு உதவும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

நாட்டில் எந்தவொரு இனத்தையும் ஓரங்கட்டாமல் மக்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டும் முயற்சிகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.இதில் இந்திய சமூகத்திற்கான திட்டங்களும் அடங்கும் என்று நிதியமைச்சராக இருக்கும் அன்வார் கூறினார்.

நேற்று சுங்கை சிபுட்டில் SJKT ஹீவூட்  தமிழ்ப்பள்ளியின் திறப்பு விழாவில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வரும்அக்டோபர் 18 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் 2025 மூலம் இந்திய சமூகத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தொடரும் என்று அன்வார் கூறினார்.

இந்திய சமூகத்தின் நலனை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்றும், கல்வி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *