கிளானாஜெயா LRT ரயில் பாதையில் பழுதாகி நின்ற ரயில்
- Shan Siva
- 13 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 13: கிளானா ஜெயாLRT ரயில் பாதையில், தாமான் ஜெயா நிலையத்திலிருந்து பல்கலைக்கழக நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு ரயில் இன்று பழுதடைந்தது.
ரயில் திடீரென நிற்பதற்கு முன்பு ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகாவும், இதனால் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RapidKL பணியாளர்கள் பயணிகளை தண்டவாளத்தின் மறுபுறத்தில் இருந்த மற்றொரு ரயிலில் ஏற்றிவிட உதவும் வரை, அந்த ரயில் சுமார் 20 நிமிடங்கள் தண்டவாளத்தில் அசையாமல் நின்றிருந்தது.
பல்கலைக்கழக நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக ரயில் நின்றதால் கெலானா ஜெயா வழித்தடத்தில் தாமதம் ஏற்பட்டதாக RapidKL கூறியுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



