“என்னைப் பார்க்கும்போதெல்லாம் ரஜினி எழுந்து நிற்பார்” – காரணத்தை பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து
- Surendran Sumdraraj
- 27 Aug, 2026
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் எளிமை மற்றும் அவர் இயக்குநர்களுக்கு அளிக்கும் மரியாதை குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது தனது 173-ஆவது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



