சுயசரிதை எழுதுவதில் தீவிரம் காட்டும் ரஜினிகாந்த் – உறுதிப்படுத்திய சவுந்தர்யா
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
சென்னை: “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது மகளும், இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய ரஜினிகாந்த், பின்னர் தனது திறமை, விடாமுயற்சி மற்றும் தனித்துவமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். அவரது இந்த வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், சிறுவயது முதல் திரையுலகில் உச்சத்தை எட்டிய காலம் வரை தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள், போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை உள்ளடக்கிய சுயசரிதையை ரஜினிகாந்த் எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனை தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்தின் ஆரம்பகால சினிமா போராட்டங்கள், அவர் சந்தித்த சவால்கள், முக்கிய திரைப்படங்கள் மற்றும் திரையுலக அனுபவங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



