சுசீந்திரனின் ‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இத்திரைப்படம் அந்நிறுவனத்தின் 10-ஆவது தயாரிப்பாக உருவாகிறது.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா–மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உணர்வுகளுடன் ஆக்ஷன் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட விறுவிறுப்பான சம்பவங்களும் கதையில் இடம்பெறுகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



