இந்தியர்களை மேம்படுத்தும் பொறுப்பை அனைத்து அமைச்சர்களும் கொண்டிருக்க வேண்டும்! – துணை அமைச்சர் ரமணன் அமைச்சர்களுக்கு நினைவுருத்து!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 7,

தங்கள் அமைச்சு சார்ந்த மக்கள் நலத்திட்டங்களில் இந்தியர்கள்  பயன் அடைவதை அனைத்து அமைச்சர்களும் உறுதி செய்ய வேண்டும் என தொழில்முனைவோரர் மேம்பாடு கூட்டுறவுக் கழக அமைச்சின் துணை அமைச்சர் Datuk Seri R. Ramanan நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது அமைச்சரவையில் இந்தியர்களுக்கான 30 மில்லியன் குறித்து இந்தியர்களுக்குத் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து வருவதாகவும் அதுபோல பிற அமைச்சுகளின் கீழ் உள்ள சலுகைகளும் இந்தியர்களுக்குச் சென்றடைகிறதா என்பதை அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் உறுதி செய்ய வேண்டும் என அவர் பிற அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் நினைவுருத்தினார்.
பிரதமர் அன்வார் தெரிவித்தது போல இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கிய நகர்வுகளை அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *