100 கோடி பார்வைகளைக் கடந்த ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர்
- Surendran Sumdraraj
- 07 Aug, 2026
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர், வெளியான சில நாட்களிலேயே அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்து இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் சன்னி டியோல், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். படத்தின் பிரம்மாண்ட காட்சியமைப்பு, நவீன தொழில்நுட்பம், விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



