‘ராமாயணா’ படத்திற்கு ராம்லீலா அமைப்பு எதிர்ப்பு: வெளியீட்டுக்கு முன் சிறப்புக் காட்சி கோரிக்கை
- Surendran Sumdraraj
- 04 Aug, 2026
புதுடெல்லி, ஆக. 4-
நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘ராமாயணா’ திரைப்படத்திற்கு ராம்லீலா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பு தங்களுக்குச் சிறப்புக் காட்சி (Special Screening) ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீ ராம்லீலா மகாசங்கம் சார்பில் படத்தின் தயாரிப்பாளர்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் வசனங்கள் மத உணர்வுகளைப் பாதிக்காத வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, வெளியீட்டுக்கு முன்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்கு சிறப்புக் காட்சி காண்பிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



