ஈரானின் ட்ரோன் தாக்குதலும் இஸ்ரேலின் 'காஸ்ட் மேத்தமேட்டிக்ஸ்' ரகசியமும்!
- Muthu Kumar
- 03 Mar, 2026
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கான மோதல் வெறும் ஏவுகணைகளுக்கும் ட்ரோன்களுக்குமான போர் மட்டுமல்ல. இது வர்தகத்திற்கான போர்.
செலவு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மிகப்பெரிய யுத்தம். $35,000 மதிப்பிலான ஒரு ட்ரோனை வீழ்த்த $4 மில்லியன் மதிப்பிலான ஏவுகணையைப் பயன்படுத்துவது நீண்ட காலத்திற்குச் சாத்தியமா? ஆனால், இவ்வளவு பதற்றத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலிய பங்குச்சந்தை (TA-35) 8.85% வரை உயர்ந்திருப்பது உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த 'காஸ்ட் மேத்தமேட்டிக்ஸ்' (Cost Mathematics) பின்னால் இருக்கும் மர்மம் என்ன? வர்த்தகப் பிரிவில் விரிவாகப் பார்ப்போம்.
(Saturation Warfare)
ட்ரோன்கள்: ஈரானிடம் சுமார் 80,000 ட்ரோன்கள் கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மாதம் 500 ட்ரோன்களை உற்பத்தி செய்யும் திறன் அவர்களுக்கு உண்டு.
ஈரானின் பலம்: மலிவான விலை. ஒரு 'ஷாஹெத்' (Shahed) ட்ரோனின் விலை வெறும் $35,000
தந்திரம்: ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்களை ஏவி, எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்பை (Air Defense) திணறடித்தல்.
2. இடைமறிப்பு ஏவுகணைகள்
ஒரு மலிவான ட்ரோனைச் சுட இஸ்ரேல் பயன்படுத்தும் ஏவுகணையின் விலை பல மில்லியன் டாலர் வரை இருக்கலாம்.
14:1 முதல் 100:1 வரை தாக்குபவருக்குச் சாதகமாக உள்ளது. ஒருவேளை ஈரான் தனது முழு பலத்தையும் பயன்படுத்தினால், அதைத் தடுக்க இஸ்ரேலுக்கு $50 பில்லியன் முதல் $200 பில்லியன் வரை செலவாகலாம்.
3. ஏன் இஸ்ரேல் சந்தை உயர்கிறது?
ஏவுகணைகள் பறக்கும்போது பங்குச்சந்தை வீழ்வதுதான் இயல்பு. ஆனால் டெல் அவிவ் பங்குச்சந்தை உயர்ந்ததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. நிச்சயமான வெற்றி, தடுப்பு நடவடிக்கை, வருங்காலத் தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் முதலீட்டாளர்கள் இஸ்ரேல் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
- இஸ்ரேலின் தொழில்நுட்பம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் நேரடி ஆதரவு ஈரானின் தாக்குதலை முறியடிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.ஈரானின் ட்ரோன் ஏவுதளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் பயனுள்ளதாக இருந்ததாக சந்தை கருதுகிறது.
- 'அயன் பீம்' (Iron Beam) போன்ற லேசர் தொழில்நுட்பம் வந்தால், ஒரு ட்ரோனைச் சுட சிறுதொகை மட்டுமே செலவாகும். இந்த எதிர்பார்ப்பு சந்தைக்குத் தெம்பூட்டுகிறது.
சவால்கள் என்ன?
புளூம்பெர்க் (Bloomberg) போன்ற நிறுவனங்களின் அறிக்கைப்படி, இடைமறிப்பு ஏவுகணைகளின் இருப்பு சில வாரங்களிலேயே தீர்ந்துபோக வாய்ப்புள்ளது. இது ஒரு 'இண்டஸ்ட்ரியல் வார்' (Industrial War). யார் வேகமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறார்கள் என்பதே வெற்றியைத் தீர்மானிக்கும்.
சமன்பாடு பொருளாதார நிலைக்காது?
$35,000 ட்ரோன் vs $4 மில்லியன் மிசைல் - இந்தச் சமன்பாடு பொருளாதார ரீதியாக நீண்ட காலம் நிலைக்காது. ஆனால், இப்போதைக்குத் தொழில்நுட்பமும், கூட்டணிகளின் பலமும் இஸ்ரேலின் கையை ஓங்கச் செய்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



