ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனிருத், ஜி.வி. பிரகாஷ் பாடிய ‘ராவண தாண்டவம்’ பாடல் வெளியீடு!

top-news

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்து பாடியுள்ள ‘இராவண தாண்டவம்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘இராமாயணம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல், ராவணனின் வீரத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தில் இராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்நிலையில், அனிருத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோரின் குரல்களில் உருவாகியுள்ள ‘இராவண தாண்டவம்’ பாடல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடலுக்கு இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியுள்ளார்.

இப்படத்தில் இராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். மேலும், சன்னி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *