காவல்துறையினர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்! - Tan Sri Razarudin Husain எச்சரிக்கை!
- Sangeetha K Loganathan
- 18 Oct, 2024
காவல்துறையில் உள்ள அதிகாரிகள் மீதான ஒழுக்கச் சீர்கேடானப் புகார்கள் அதிகரித்து
வருவதால் ஆடம்பர வாழ்க்கையை வாழும் காவல் அதிகாரிகள் சிறப்புக் காவல் அதிகாரிகளால்
கண்காணிக்கப்படுவதாக தேசிய காவல்படை தலைவர் Tan Sri Razarudin Husain எச்சரித்தார்.காவல் அதிகாரிகளிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வரும்நிலையில் காவல்
அதிகாரிகள் மீது அதிகப்படியானக் கவனம் செலுத்துவதுடன்,
அவர்களைச் சோதனையில் ஈடுபடுத்தவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மீது பணி நீக்கம்,
பணி மாற்றம் போன்ற தண்டனைகள் போதாது என்றும், கடுமையான சில தண்டனைகளை
மீண்டும் அமல்படுத்த வேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Ketua
Polis Negara, Tan Sri Razarudin Husain menegaskan pemantauan ketat terhadap
pegawai polis berlebihan gaya hidup mewah dan ujian saringan urin berkala,
serta tindakan tegas bagi membendung salah laku jenayah, dadah, dan disiplin.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *