பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு அறுவை சிகிச்சை!
- Muthu Kumar
- 24 Dec, 2025
பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மருக்கு இடது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுளளதாக சான்டோஸ் கிளப் தெரிவித்துள்ளது.
33 வயதான நெய்மர், இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் அவர், பங்கேற்கவில்லை. பல போட்டிகளில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்து வலிகளை சரிசெய்ய விரும்புவதாக நெய்மர் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் பிரேசில் அணியுடன் பணியாற்றும் மருத்துவரான ரோட்ரிகோ லஸ்மர், நெய்மரின் காயத்துக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
கடந்த வார இறுதியில், சாவோ பாலோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நெய்மர், உலகக் கோப்பையில் விளையாடவும், இறுதிப் போட்டியில் கோல் அடிக்கவும் தான் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியிருந்தார். எனினும் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்ட பிரேசில் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி, இன்னும் நெய்மரை தேசிய அணிக்கு தேர்வு செய்யவில்லை.
கடந்த ஜனவரி மாதம் சிறுவயது கிளப்பான சாண்டோஸுக்குத் திரும்பிய அவர், ஏப்ரல் மாதம் தொடங்கிய பிரேசிலின் சீரிஸ் ஏ தொடரில் 38 ஆட்டங்களில் 19-ல் மட்டுமே விளையாடினார். அவர், 8 கோல்களை அடித்திருந்தார். இறுதி கட்ட சுற்றுகளில் நெய்மர் அடித்த கோல்கள் சாண்டோஸை தொடரில் இருந்து வெளியேற்றுவதைத் தவிர்க்க உதவியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



