தாபுங் ஹாஜி RCI விசாரணை: வெளிநாட்டு தடயவியல் நிபுணர்களை நியமிக்க SPRM பரிசீலனை

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், ஆக. 13-

தாபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவகாரங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைக்குக் கூடுதல் புலனாய்வு அதிகாரிகளை நியமிப்பதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்களையும் நியமிப்பது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) பரிசீலித்து வருவதாக SPRM தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறினார்.

விசாரணையில் கிடைத்துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரப் பொருட்களை விரிவாக ஆய்வு செய்வதற்காக இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

RCI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் அதிகளவில் இருப்பதால், அவற்றை முறையாக ஆய்வு செய்ய கூடுதல் நிபுணத்துவம் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

வெளிநாட்டு தடயவியல் நிபுணர்களை நியமிப்பது தொடர்பான முன்மொழிவு தற்போது SPRM-இன் உயர்மட்ட நிலையில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது நிபுணர்களைச் சேர்ப்பதால் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *