தபோங் ஹாஜி விவகாரம்: ஆதாரம் இருந்தால் மூத்த அம்னோ தலைவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தலாம் – சாஹிட்

top-news

கோலாலம்பூர், செப். 10 –

தபோங் ஹாஜி வாரியம் தொடர்பான விவகாரத்தில் அம்னோவின் எந்த மூத்த தலைவருக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் இருந்தால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அம்னோ எந்தத் தடையும் ஏற்படுத்தாது என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டால், எஸ்.பி.ஆர்.எம். உடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், கட்சி பதவி அல்லது அரசியல் செல்வாக்குக் காரணமாக யாருக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

எனினும், தபோங் ஹாஜி விவகாரம் தொடர்பாக அம்னோவின் எந்த மூத்த தலைவரும் இதுவரை கைது செய்யப்பட்டதாகத் தமக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் சாஹிட் தெரிவித்தார்.

இதனால் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அல்லது வதந்திகளை அடிப்படையாக கொண்டு முன்கூட்டியே முடிவுகளுக்கு வரக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *