பத்து பஹாட்டில் 200 பள்ளிகள் இன்று மூடுவதற்கு உத்தரவு!

top-news

பத்து பஹாட், அக் 7: பத்து பஹாட் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 200 பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் இன்று முதல் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மோசமடைந்து வரும் புகைமூட்டச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்து பஹாட் மாவட்ட அதிகாரி கமாலுதீன் ஜமால் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பெறப்பட்ட தகவல்களின்படி, இரவு 8 மணிக்கு பத்து பஹாட்டில் காற்றின் மாசுபாடு குறியீடு (API) அளவு 203-ஆகப் பதிவாகியுள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

பத்து பஹாட் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவராகவும் செயல்படும் கமாலுதீன், இந்த அளவு 'மிகவும் ஆரோக்கியமற்ற' நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *