ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் மாற்றம் – சாபி அலோன்சோ விலகல், ஆர்பெலோவா நியமனம்

top-news

மாட்ரிட், ஜன. 13-

ஸ்பெயின் கால்பந்து மாபெரும் அணியான ரியல் மாட்ரிட், தங்களின் தலைமை பயிற்சியாளர் சாபி அலோன்சோ பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. அவரது இடத்தை அணியின் முன்னாள் வீரர் அல்வாரோ ஆர்பெலோவா  நிரப்புவார் எனவும் உறுதி செய்யப்பட்டது.

இந்த முடிவு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்பானிஸ்  சூப்பர் கிண்ண இறுதிப்போட்டியில் பார்சிலோனா அணியிடம் ரியல் மாட்ரிட் 3–2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததற்கு அடுத்த நாளே எடுக்கப்பட்டது. இதன் மூலம், அலோன்சோவின் பயிற்சியாளர் காலம் எட்டு மாதங்களுக்கும் குறைவாகவே நீடித்து முடிவடைந்தது.

அலோன்சோ தலைமையில் சில நேர்மறை மாற்றங்கள் காணப்பட்டாலும், முக்கிய போட்டிகளில் நிலைத்தன்மை இல்லாத செயல்பாடு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கிளப் நிர்வாகம் புதிய திசை தேவை எனக் கருதி மாற்றத்தை அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கும் ஆர்பெலோவா, ரியல் மாட்ரிட் அகாடமி, இளைய அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது நியமனம், அணியின் நீண்டகாலத் திட்டங்களுக்கு முக்கிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *