18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம்; Vishnu Vishal நெகிழ்ச்சி

top-news

சென்னை, ஜூலை 10-

18 ஆண்டுகளாக செய்த உழைப்புக்கான அங்கீகாரம் இப்போது கிடைத்தது போன்ற உணர்வு இருப்பதாக நடிகர் Vishnu Vishal நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், பல இடங்களில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று முன்பு வருத்தப்பட்டதுண்டு என்றார்.

ஆனால், தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றி, கடந்த 18 ஆண்டுகளாக அவர் செய்த உழைப்புக்கான வெகுமதியாக உணரப்படுகிறது என Vishnu Vishal கூறினார்.

தற்போது குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்கள் குறைந்துவிட்டதாகவும், அத்தகைய சூழலில் ‘கட்டா குஸ்தி 2’ போன்ற படம் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *