‘ஃபார்முலா 1’ பந்தயத்தைக் கண்டுகளிக்க இலவச ஷட்டில் பேருந்து சேவை!

top-news

புத்ராஜெயா, செப் 24: ரேபிட் கேஎல், சிப்பாங் சர்வதேச சர்க்யூட்டுடன் (எஸ்ஐசி) இணைந்து, அக்டோபர் 2 முதல் 4 வரை நடைபெறும் ஃபார்முலா 1 (எஃப்1) கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை முன்னிட்டு இலவச ஷட்டில் பேருந்து சேவைகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த இலவச ஷட்டில் சேவைக்காக, முக்கிய இடங்களிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சுழற்சி முறையில் தொண்ணூற்றைந்து பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

இந்த சிறப்பு ஷட்டில் பேருந்து சேவை, கே.எல்.ஐ.ஏ டெர்மினல் 2-இன் தளம் 1-இல் உள்ள பேருந்து மையம்,  Mitsui KLIA bus hub மற்றும் De-Village, Persiaran Millenia 2, Bandar Baru Enstek ஆகிய மூன்று இடங்களிலிருந்து இயக்கப்படும் என்று ரேபிட் பஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷாருல் அஸ்மிர் அஹ்மத் ஜாக்கி கூறினார்.

இந்தச் சேவை மூன்று நாட்களிலும் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை, 10 முதல் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இந்தச் சேவைக்குத் துணையாக, பார்வையாளர்கள் முக்கிய இடங்களுக்குச் செல்வதை எளிதாக்க, ரேபிட் கே.எல் பந்தயத் திடலுக்குள் ஷட்டில் பேருந்துகளையும் வழங்கும்.

இந்தச் சேவைகளை வழங்குவது, சர்வதேசத் தரத்திலான நிகழ்வுகளை நடத்துவதற்கு ஆதரவளிப்பதிலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் ரேபிட் கே.எல் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

ஷட்டில் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும்போது, பார்வையாளர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், பணியில் உள்ள ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், வரிசையில் நிற்கவும் ஷாருல் அறிவுறுத்தினார்.

ஷட்டில் பேருந்து சேவைகளின் வழித்தடங்கள் மற்றும் இயக்க அட்டவணைகள் குறித்த மேலதிக தகவல்களை ரேபிட் கே.எல்-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெறலாம்.

F1 வரலாற்றில் முதல் முறையாக, மலேசியா F1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் GP-ஐ SIC-இல் நடத்தவுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *