மான்செஸ்டர் சிட்டியை 2-0 என வீழ்த்திய பயர் லெவர்கூசன்

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

மான்செஸ்டர், நவ. 26-

மான்செஸ்டர் எதிஹாட் ஸ்டேடியத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. ஜெர்மன் சாம்பியன் பயர் லெவர்கூசன் மான்செஸ்டர் அணியை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சிட்டியின் அபார சாதனையை உடைத்தெறிந்தது.

கடந்த 23 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தோல்வியே காணாத சிட்டியின் அசைக்க முடியாத சாதனை இன்று முறியடிக்கப்பட்டது. இந்தத் தோல்வி பெப் குவார்டியோலாவுக்கு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக 100-ஆவது ஆட்டமாக அமைந்தது – ஆனால் அது கொண்டாட்டத்திற்கு பதில் ஏமாற்றத்தையே தந்தது.

முதல் பாதியில் பெப்பின் அதிரடி முடிவால் 10 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் பலவீனமான அணியாக களமிறங்கிய சிட்டி, லெவர்கூசனின் தாக்குதல்களை தடுக்க முடியாமல் திணறியது. அலெஜான்ட்ரோ கிரிமால்டோ, பாட்ரிக் ஷிக் ஆகியோரின் கோல்கள் லெவர்கூசனுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தன.

இந்தத் தோல்வியால் 5 போட்டிகளில் 10 புள்ளைகளுடன் சிட்டி தற்காலிகமாக 6-ஆவது இடத்திற்கு சரிந்தது. லெவர்கூசன் 13ஆவது இடத்திற்கு முன்னேறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *