சிவாஜி கணேசனின் பேரன் நாயகனாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 30-

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.டி. பாலசந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தர்ஷன் கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஸ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் காவலரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *