சிவராஜ்குமார் நடித்த ‘பெயில்’ படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது
- Surendran Sumdraraj
- 13 Jul, 2026
சென்னை, ஜூலை 13-
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ள ‘பெயில்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், படக்குழு ‘பெயில்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, படம் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி நாளில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது.
‘பெயில்’ திரைப்படத்தை பவன் வடேயார் இயக்கியுள்ளார். அதிரடி மற்றும் உணர்ச்சி கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படம், சிவராஜ்குமார் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



