பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான் நடிக்கும் ‘மூன்வாக்’ – தீபாவளிக்கு திரைக்கு வருகிறது

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 3 –

பிரபுதேவா மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து நடிக்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் இந்த திரைப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ் திரையுலகில் 1990-களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கூட்டணிகளில் ஏ.ஆர்.ரகுமான்–பிரபுதேவா கூட்டணி முக்கியமானதாகும். 1994-ஆம் ஆண்டு வெளியான ‘காதலன்’ படத்தின் மூலம் இணைந்த இவர்கள், பின்னர் ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றினர்.

‘மின்சார கனவு’ படத்துக்குப் பிறகு சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் ‘மூன்வாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *