விஜய் தேவரகொண்டா நடித்த ‘ரணபாலி’ அக்டோபர் 16-இல் உலகளவில் ரிலீஸ்

top-news
FREE WEBSITE AD

சென்னை: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படம் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் சாங்கிரித்யான் இயக்கியுள்ள இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக இருவரும் ‘ரணபாலி’ படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளனர்.

‘மம்மி’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூவும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய்–அதுல் இசையமைக்கின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *