‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலா போலேலோ’ பாடலின் 2-வது புரோமோ வெளியீடு
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அலா போலேலோ’ இன்று வெளியாக உள்ள நிலையில், அந்தப் பாடலின் 2-ஆவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து, அதன் 2-ஆவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்ரவர்த்தி, சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



