மலாய்க்காரர் அல்லாதவரின் ஆதரவை PH தக்கவைத்துக்கொண்டது!
- Shan Siva
- 10 Jul, 2024
ஜார்ஜ் டவுன், ஜூலை 10: சமீபத்திய சுங்கை பக்காப் தேர்தலில் குறைந்த
வாக்குப்பதிவு இருந்தபோதிலும், பக்காத்தான்
ஹராப்பான் (PH) மலாய்க்காரர்
அல்லாத வாக்காளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று பினாங்கு முதல்வர்
சோவ் கோன் இயோவ் தெரிவித்தார்.
ஒருவேளை
இடைத்தேர்தல் என்பதால், வாக்களித்தாலும்
வித்தியாசம் இருக்காது என்று சிலர் நினைத்திருக்கலாம்," என்று கூறிய அவர், டிஏபி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடாததால் கூட இருக்கலாம்
என்று நகைச்சுவையாக கூறினார்.
சில வாக்காளர்கள்
அதிருப்தி அடைந்திருக்கலாம் அல்லது மீண்டும் வாக்களிக்க விரும்பாமல் இருக்கலாம்.
இருப்பினும்,
இன அடிப்படையில் வாக்களிப்பது நடைமுறையில்
இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அவர் நார்தம்
ரோட்டில் நடந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாஸ் தலைமையிலான பெரிகாத்தான்
நேஷனல் (பிஎன்) கூட்டணி 83% மலாய்
வாக்குகளைப் பெற்றது, அதே நேரத்தில் PH
மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளில் 85% பெற்றது, குறிப்பாக சீன வாக்காளர்களிடமிருந்து.
தேசிய, மாநில மற்றும் உள்ளூர் தலைவர்கள் கலந்து
கொண்டதாகக் கூறி, டிஏபியின்
பிரச்சாரம் பிரிவுகளால் பிளவுபட்டது என்ற கெராக்கானின் கூற்றையும் அவர்
நிராகரித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *