பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர்: வெள்ள அபாயம் ஏற்படும் – அன்புமணி எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
சென்னை, செப். 4 –
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என்றும், இது மீட்சித் திட்டம் அல்ல; அழிவுத் திட்டம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ‘நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்’ என்ற பெயரில் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவரும், 2 கிலோமீட்டர் நீளத்திற்கு நடைபாதையும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒருகாலத்தில் 15 ஆயிரம் ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது 1,750 ஏக்கராக சுருங்கியுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் எல்லைகளை வரையறுப்பதே முதன்மையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
6 அடி உயரத்தில் அமைக்கப்படும் தடுப்புச் சுவர் இயற்கையான நீரோட்டத்தை தடுக்கும் என்பதால், மழைக்காலங்களில் பள்ளிக்கரணை மற்றும் சென்னை நகரின் பிற பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அன்புமணி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



