அமெரிக்காவுக்கு எதிராக திரும்புகிறதா உலக நாடுகள்?
- Muthu Kumar
- 24 Sep, 2025
அமெரிக்காவின் H-1B விசா கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்ந்துள்ள நிலையில், உலகளாவிய திறன்மிக்க ஊழியர்கள் அடுத்து எங்கு செல்வது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையை பயன்படுத்திக்கொள்ள உலக நாடுகள் அடுத்தடுத்து முக்கியமான முடிவுகளை எடுத்து வருகின்றது.ஒரு துறை வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிகப்படியான திறன் வாய்ந்த ஊழியர்களும், முதலீட்டு தேவையான பணமும் வேண்டும். இன்றளவு உலக நாடுகளில் பணம் பெரிய நெருக்கடி இல்லை என்றாலும் திறன்வாய்ந்த ஊழியர்களுக்கு ஏராளாமாக தட்டுப்பாடு உள்ளது.
இந்த நிலையில் ஹெச்1பி விசா கட்டுப்பாட்டை உலக நாடுகள் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.சீனா அரசு, அமெரிக்காவின் ஹெச்1பி விசாவுக்கு இணையாக கே விசா என்ற புதிய விசாவை அறிமுகம் செய்துள்ள வேளையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உலகின் டாப் அறிவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களுக்கான விசா கட்டணங்களை முற்றிலும் நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறார் என்று பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த முயற்சி மூலம்,இங்கிலாந்தின் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என கெய்ர் ஸ்டார்மர் அரசு நம்புகிறது. இந்த மாற்றம், இந்திய தொழில்நுட்பத் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம், ஏனெனில் இந்திய வல்லுனர்கள் அமெரிக்காவுக்கு மாற்றாக இங்கிலாந்தை தேர்வு செய்து பணிக்காக குடியேரலாம். இங்கிலாந்து 2020-இல் அறிமுகப்படுத்திய உலகளாவிய திறமை விசா (Global Talent Visa) கீழ் அறிவியல், பொறியியல், மருத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பம், மனிதநேயம் மற்றும் கலைத் துறைகளில் திறமையான நபர்களை ஈர்க்க வடிவமைக்கப்பட்டது.
தற்போது, இந்த விசாவிற்கு ஒரு விண்ணப்பதாரருக்கு 766 பவுண்ட் கட்டணமாகவும், கூடுதலாக ஆண்டு சுகாதாரக் கட்டணமாக 1,035 பவுண்ட் செலுத்த வேண்டியுள்ளது.இந்தக் கட்டணங்கள், விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
ஆனால், ஸ்டார்மரின் Global Talent Task Force அமைப்பு இந்தக் கட்டணங்களை முற்றிலும் நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. உலகின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள் அல்லது மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த வல்லுனர்கள் பெரிய அளவில் பலன் பெறுவார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



