நீங்க ஹீரோ மெட்ரியலா? மைக்கை பிடுங்கி கோபத்தை காட்டிய சரத்குமார்!

top-news
FREE WEBSITE AD

டியூட் படம் தீபாவளி ரிலீஸாக வரும் 17 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தின் புரோமோஷன் வேலைகளில் தற்போது பிரதீப் மற்றும் சரத்குமார் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஹைதராபாத்தில் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இருக்க அப்போது பெண் நிருபர் ஒருவர் பிரதீப்பிடம் 'இதை நெகட்டிவ்வாக நினைக்க வேண்டாம். நீங்க ஹீரோ மெட்ரியலே கிடையாது. ஆனால் தொடர் வெற்றிக்கு காரணம் உங்களுடைய கடின உழைப்பா? இல்ல லக்கா'என கேட்டார்.

பிரதீப் மைக்கை எடுத்து பேசப் போக உடனே அந்த மைக்கை வாங்கி சரத்குமார் 'சாரி பிரதீப். மைக்கை வாங்கிக் கொண்டேன்' என கூறி அதற்கான பதிலை நான் கூறுகிறேன் என தொடர்ந்தார். இந்த துறையில் தான் நான் இருக்கிறேன். 170 படங்களில் நடித்திருக்கிறேன். உங்களால் A to Z சொல்லமுடியாது யார் ஹீரோ மெட்டிரியல்னு. ஒவ்வொருவரும் ஹீரோ மெட்டிரியல்தான்.

ஹீரோ மாதிரி இருக்க, அதற்கு என ஏதாவது அடையாளம் இருக்கா? இல்லையே, ஒருவர் அவர் செய்யும் செயலால் சமூகத்திற்கு நல்லது நடக்கிறது என்றால் அவர்தான் ஹீரோ என நிருபர் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்தார் சரத்குமார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *