எனது தந்தையை அசிங்கப்படுத்துவதா?! - பெர்சாத்து நபர் மீது வழக்கு! - பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆவேசம்

top-news

கோலாலம்பூர், ஜூன்16: தனது குடும்பத்தையும் தந்தையையும் அவமதித்ததாகக் கூறப்படும் பெர்சாத்து தலைவர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமிமி தாயிப் அஸாமுதீன் தனது வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விரைவில் இது தொடர்பாக் ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்புவோம் என்று அஃப்னான் நேற்று இரவு ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

பெர்சாத்து தலைமையின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்ட பிறகு, மலாக்கா பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் ஹிஷாமுதீன் அப்துல் கரீம், அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படும் தனது பதிவை நீக்கிவிட்டதாகவும், தனது செயல்களுக்காக மன்னிப்புக் கோரியதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அவர் யாரிடம் மன்னிப்புக் கோரினார் என்பது தனக்குத் தெரியவில்லை, ஏனெனில் அவர் அதைக் குறிப்பிடவில்லை என்று அவர் கூறினார்.

ஹிஷாமுதீனின் சமூக ஊடகப் பதிவு தனது தந்தையை அவமதித்து இழிவுபடுத்தியதாகவும், அது தனது தந்தை மற்றும் தனது சொந்தக் குடும்பம் இருவரையும் பாதித்ததாகவும் அவர் கூறினார்.

இத்தகைய கடுமையான மற்றும் அவமதிக்கும் அறிக்கை தனது குடும்பத்தை உளவியல் ரீதியாகப் பாதித்துள்ளது என்று அவர் கூறினார்.

நேற்று, கெடாவில் அஃப்னான் ஆற்றிய உரைக்கு பதிலளித்த ஹிஷாமுதீன், அஃப்னானின் தந்தை தைஃப் அஸாமுதீன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், அவருக்கு ஒழுங்கற்ற மற்றும் மரியாதையற்ற குழந்தை இருந்திருக்காது என்று கூறினார்.

அவர் ஆணுறைகள் அடங்கிய ஒரு பெட்டியின் படத்தையும் பதிவேற்றினார்.

இந்தக் கருத்துக்களைத் தொடர்ந்து, அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினர் அஃப்னான், ஹிஷாமுதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *