உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி அதிர்ச்சி தோல்வி!

top-news

உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி 1-2 என, பராகுவேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.அமெரிக்கா, கனடாவில் வரும் 2026ல் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது.

இதற்கான தகுதிச் சுற்று, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. பராகுவேயில் நடந்த தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றின் அர்ஜென்டினா, பராகுவே அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்சி, ஒரு கோல் கூட அடிக்கவில்லை.வெனிசுலாவில் நடந்த மற்றொரு போட்டியில் பிரேசில், வெனிசுலா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது. ஈகுவடாரில் நடந்த போட்டியில் ஈகுவடார் அணி 4-0 என்ற கணக்கில் பொலிவியா அணியை தோற்கடித்தது.இதுவரை விளையாடிய 11 போட்டியில், 7 வெற்றி, ஒரு 'டிரா', 3 தோல்வி என 22 புள்ளிகளுடன் அர்ஜென்டினா அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடங்களில் கொலம்பியா (19 புள்ளி), பிரேசில் (17) உள்ளன. புள்ளிப்பட்டியலில் 'டாப்-6' இடம் பிடிக்கும் அணிகள் உலக கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறும்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *