கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னை கொலை செய்ய முயற்சி - எலான் மஸ்கின் எக்ஸ் தள பதிவு!

top-news
FREE WEBSITE AD

எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் கடந்த 8 மாதங்களில் தன்னைக் கொல்ல 2முறை முயற்சிகள் நடந்து 2 பேர் துப்பாக்கிகளுடன் கைதானதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தன்னுடைய வித்தியாசமான கருத்துக்கள் பதிவுகள் மூலம் மிகவும் பிரபலமானவர்.

அதாவது, அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump) மீது மர்மநபரொருவர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இருந்தாலும் டொனால்டு டிரம்ப் உயிருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பதுடன் அவர் தற்போது, நலமுடன் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், எலான் மஸ்க் இப்படி ஒரு பதிவை பதிவிட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *