அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவித்தார் பிரதமர்! சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு மட்டுமே ஊதிய உயர்வு!
- Shan Siva
- 16 Aug, 2024
புத்ராஜெயா, ஆகஸ்ட் 16: SSPA எனப்படும் புதிய பொது சேவை ஊதிய முறையின் கீழ் அரசு ஊழியர்கள் 7% முதல் 15% வரை சம்பள
உயர்வு பெறுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
உயர்
நிர்வாகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வும், செயலாளர்கள்,
மேலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என
வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு 15% ஊதிய உயர்வும்
கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சவாலான
பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சம்பள உயர்வு கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்றும்,
SSPA திட்டத்தை தேர்வு செய்த
அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அன்வார் கூறினார்.
முதல் கட்டமாக டிசம்பர்
1ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஜனவரி2026 ஆம ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியும் செயல்படுத்தப்படும்
என்று அவர் கூறினார்.
செயல்படுத்துபவர்கள்,
மேலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என
வகைப்படுத்தப்பட்ட அரசு ஊழியர்கள் 1 ஆம் கட்டத்தில் 8% மற்றும் 2 ஆம் கட்டத்தில் 7% அதிகரிப்பைப் பெறுவார்கள், அதே நேரத்தில்
உயர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் கட்டம் 1 இல் 4% மற்றும் கட்டம் 2 இல் 3% அதிகரிப்பைப் பெறுவார்கள்.
இருப்பினும், பணிகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என அன்வார் எச்சரித்துள்ளார்.
மெதுவாகவும்,
சோம்பேறியாகவும், அலட்சியமாகவும் இருப்பவர்களுக்கு, 20 ஆண்டுகளாக அரசுப் பணியில் இருந்தாலும், அவர்களுக்கு ஊதிய உயர்வு உத்தரவாதம்
அளிக்கப்படாது என, புத்ராஜெயா
சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று நடந்த 19வது பொதுச்சேவை ஊழியர்களுக்கான சிறப்புக்
கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
சிறப்பாகச்
செயல்படுபவர்கள் அரசுப் பணியில் 10 ஆண்டுகளுக்கும்
குறைவாக இருந்தாலும் ஊதிய உயர்வு பெறுவார்கள். இந்த உண்மையை அனைத்து அரசு
ஊழியர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இனி பழைய நடைமுறைகளை தொடர
முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நிதியமைச்சராக
இருக்கும் அன்வார், அனைத்து அரசு
ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய சம்பள மாற்றத்திற்காக அரசாங்கம் 10 பில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது
என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *