பெருவில் டிக்டாக்கின் தலைமை குழுவைச் சந்தித்த பிரதமர் அன்வார்!
- Muthu Kumar
- 14 Nov, 2024
சைபர்புல்லிங் மற்றும் ஆன்லைன் மோசடிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தகவல் தொடர்பு அமைச்சகம், மலேசியத் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (MCMC) மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றுடன் ஒத்துழைக்கப் போவதாக TikTok உறுதியளித்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பெருவில் உள்ள லிமாவில் நேற்று டிக்டோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ சி சியூ தலைமையிலான குழுவைச் அன்வார் சந்தித்ததைத் தொடர்ந்து இவ்வாறு தெரிவித்தார்.
“சந்திப்பின் போது, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை செயல்படுத்துவது உட்பட பல விஷயங்களை பற்றி கலந்து ஆலோசித்ததாகவும்
“சைபர்புல்லிங், மோசடிகள் மற்றும் மலேசியாவில் டிக்டோக்கில் பரவலாக இருக்கும் அவதூறு கலாச்சாரம் போன்ற பிரச்சினைகளை பற்றி பேசப்பட்டது என்று அன்வார் கூறினார்.
மதானி அரசாங்கத்திற்கும் மலேசியாவில் டிக்டோக்கிற்கும் இடையிலான ஒத்துழைப்பை நாங்கள் விவாதித்தோம், மேலும் கணிசமான முதலீடுகளைத் தொடரும் திட்டங்களை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவராக மலேசியாவின் முயற்சிகளை ஆதரிப்பதற்கான தனது நிலைப்பாட்டை TikTok வெளிப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *