கத்தாரில் பிரதமர்!

top-news

மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  டோஹா சென்றடைந்தார்.  அதிகாலை 2.37 மணியளவில் பிரதமர் கத்தார் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரதமரை அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முராக்கி, மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ  முகமத் ஹசான், கத்தாருக்கான மலேசியத் தூதர் ஜம்ஷாரி ஷஹாரன் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.  பிரதமருடன் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் ஆகியோரும் சென்றனர்.  கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு விஜயம் செய்துள்ளார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *