AI, தரவு பாதுகாப்பு குறித்து கூகுள் நிறுவனத்துடன் பிரதமர் விவாதம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 15: டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் எதிர்காலத்தை மையமாக வைத்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் நேற்று பெருவின் லிமாவில் கலந்துரையாடினார்.

குறிப்பாக தரவுக் கசிவு மற்றும் தீங்கிழைக்கும் சுரண்டலைத் தடுக்க தெளிவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிறுவும் வகையில், AI மற்றும் தரவு மையச் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.

எனவே, பாதிப்பைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாக,  கூகுளின் உலகளாவிய அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கையின் தலைவரான கரன் பாட்டியாவை Apec எனப்படும்  ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பின் உச்சிமாநாடு 2024-ல்  சந்தித்த பின்னர் அன்வார் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *