பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM 500 பிரதமரின் சிறப்பு நன்கொடை!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு, செப் 24: கடந்த வாரம் பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 202 குடும்பங்களுக்கு தலா 500 ரிங்கிட் சிறப்பு நன்கொடையாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வழங்கினார்.

தற்காலிக நிவாரண மையங்களில் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்கள், தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான நட்மாவிடமிருந்து தலா RM1,000 பெறுவார்கள் என்று அன்வாரின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் கூறினார்.

கெடாவில் நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர் பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தையும் பிரதமர் கவனத்தில்கொண்டார் என அவர் தெரிவித்தார்.

பினாங்கில் நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக கடந்த வாரத்தில் 623 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *