பிரதமரின் பயணச் செலவு-அமைச்சர் ஃபாமி பாட்சில் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, நவ. 23-

அண்மையில் ஐந்து நாடுகளுக்குத் தாம் மேற்கொண்ட பயணத்திற்கான ஒரு பகுதிச் செலவை தனியார்துறை ஏற்றுக்கொண்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மக்களவையில் விளக்கியிருந்தார். அதற்கு அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான ஃபாமி பாட்சில் விளக்கமளித்துள்ளார். அப்பயணங்களுக்கு அரசாங்கப் பேராளர்கள் தனியார்துறையின் வாடகைப் பயணத்தைப் பயன்படுத்தினர். செலவைக் குறைக்கும் நோக்கத்தில் அவ்வாறு செய்யப்பட்டது.

புத்ராஜெயாவின் ஜெட் பிரிமியர் ஒன் விமானம் இதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால், அதற்கு செலவு அதிகமாகியிருக்கும் என்று ஃபாமி சுட்டிக்காட்டினார். அரசாங்கப் பேராளர்களுக்காகன செலவை மட்டுமே மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. தனியார்துறை பேராளர்களின் பயணச்செலவை அவர்களே ஏற்றுக் கொண்டனர். மொத்த செலவில் 73 விழுக்காடு தனியார்துறையினர் சம்பந்தப்பட்டதாகும் என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *